கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது கார்த்திகை திருநாளும் நெருங்கிக் கொண்டிருக்கிறது கார்த்திகை தீபத்தை ஏற்றும் பொழுது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்..
திருவண்ணாமலை தீபம் ஏற்றிய பின் சரியாக 6:30 மணிக்கு நாம் வீடுகளில் விளக்கை ஏற்ற வேண்டும், வீட்டில் இருக்கும் உடையாத சேதமடையாத பழைய அகல் விளக்குகளை தாராளமாக பயன்படுத்தலாம், விளக்கேற்றுவதற்கு நெய் நல்லெண்ணெய் மற்றும் பஞ்ச தீப எண்ணெய் ஆகியவைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம், நாம் வீடுகளில் குறைந்தது 25 முதல் 27 அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும், முதலில் வாசல் படியில் விளக்கை ஏற்றிய பின்னரே வீட்டுக்குள் வந்து வைக்க வேண்டும் பூஜை அறையில் ஏற்றி வெளியே எடுத்துச் செல்லக்கூடாது, வீட்டு வாசல் இயற்றிய விளக்குகள் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் வரை எரிய விட வேண்டும் அதுவே போதுமானது. வீட்டின் அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்ற வேண்டும் இது வீட்டினுள் லட்சுமி பிரவேசத்தை உறுதி செய்யும்..!!




