அரசு ஊழியர்களுக்கு வந்தாச்சு குட் நியூஸ்..!! அகவிலைப்படி உயர்ந்தாச்சு?..

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி(DA) மற்றும் அகவிலை நிவாரணம்(DR) ஆனது அகில இந்திய நுகர்வோர் குறியீட்டின் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், அகவிலை அறிவிப்புகள் ஆண்டுக்கு 2 முறை என்ற கணக்கில் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படுகிறது. அந்த வகையில், தற்போது 8 வது ஊதிய குழு அமைப்பதற்கான ஏற்பாடுகள்   மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த 8வது குழு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது, 7வது ஊதிய குழுவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2.57% ஃபிட்மெண்ட் காரணி பயன்படுத்தப்படுவதை தொடர்ந்து , இந்த 8 வது ஊதிய குழு நடைமுறைப்படுத்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மெண்ட் காரணி 2.86% மடங்கு அதிகரிக்கும். இதன்மூலம், 2026 ம் ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 35,400 ரூபாயாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஓய்வூதியம் பெறுவோருக்கு ஃபிட்மெண்ட் காரணி 2.86% அதிகரிக்கும் பட்சத்தில், ரூ.9000-ல் இருந்து 25,740 ரூபாயாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

பொண்டாட்டியின் பத்து அவதாரங்கள்..!! சில பொண்டாட்டிகள் மட்டும் தான்..!!

Read Next

படித்ததில் பிடித்தது: நமக்கு நம்பிக்கை துரோகம் செய்பவர்கள் யார் என்று கேட்டால் நம் கூடவே இருப்பவர்கள்தான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular