நிதி ஒழுக்கத்தை வளர்ப்பதற்கும் எதிர்காலத்திற்கான செல்வத்தை உருவாக்குவதற்கும் “முறையான முதலீட்டு திட்டம்” (SIP) உதவுகிறது. மேலும், SIP திட்டத்தில் மூலம் நீங்கள் சிறியதாக முதலீடு செய்ய தொடங்கி அதிக வருமானத்தை உருவாக்கலாம். அதாவது மாதந்தோறும் ரூ.10,000 முதலீட்டுடன் SIP திட்டத்தைத் தொடங்கினால் இதற்கு ஆண்டுதோறும் 12% வருமானம் கிடைக்கும். இந்த முதலீட்டை மாதந்தோறும் தொடர்ந்தால் 5 கோடி ரூபாய் இலக்கை எட்ட சுமார் 33 ஆண்டுகள் ஆகும்.
இந்த இலக்கை விரைவாக எட்டுவதற்கு SIP முதலீட்டை ஒவ்வொரு ஆண்டும் 10% அதிகரிக்க வேண்டும். அதாவது முதல் ஆண்டு மாதம் 25,000 ரூபாய் முதலீடு செய்துவிட்டு, இரண்டாவது ஆண்டில் மாதாந்திர முதலீட்டை 10% அதிகரித்து மாதத்திற்கு ரூ.27,500 முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு 20 ஆண்டுகளுக்கு தொடர்ந்து செய்வதன் மூலம் உங்களின் வருமானம் மற்றும் சேமிப்பு திறனும் அதிகரித்துக் கொண்டே வரும். மேலும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்வதற்கு முன் அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்து புரிந்து கொள்ளவும் அல்லது நிபுணர்களை அணுகி ஆலோசனை பெற செக்யூரிட்டி அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியா (SEBI) அறிவுறுத்துகிறது.




