கார்த்திகை தீபத் திருநாளில் செய்யும் பனையோலை கொழுக்கட்டை யாருக்கெல்லாம் தெரியும்..??

#பனைஓலை #கொளுகட்டை 💚
#தென்மாவட்ட மக்களுக்கு மட்டுமே இதன் அருமை தெரியும்..

சாதாரண #பனை ஓலைல செய்யிற கொளுகட்டைல வர்ற மனமும் சுவையும் வேற எதுலயும் வராது 😍❤️

#தென்தமிழகத்தில் #காா்த்திகை #கொழுக்கட்டை பச்சரிசி மாவில், வெல்லம், சிறுபயறு, ஏலக்காய் கலந்து #பனையோலை களில் வைத்து வேகவைத்து எடுப்பது #நெல்லை, #தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வழக்கமாக இருந்து வருகிறது.

இதில், #கன்னியாகுமரி மாவடத்தில் பனை ஓலை, #சீலாந்திஇலை( #பூவரசுஇலை), #பொரியாணிஇலை (#பொரியுண்ணிஇலை), #வாழைஇலை, #தெரளிஇலை ஆகியவற்றையில் கொழுக்கட்டை மாவை வைத்து கொழுக்கட்டை தயாரிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

#குமரிமாவட்டத்தில் தெரளி இலையில் கொழுக்கட்டை செய்வதையே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனா்

நறுமணமுடைய தெரளி இலை #குமரி மாவட்ட மலையோரங்களிலும் பெரும்பாலான வீடுகளிலும் வளர்கிறது, கார்த்திகை என்றாலே குமரிக்கு தீபமுடன் கொழுக்கட்டை யும் தான்…

தமிழர் திருநாள் கார்த்திகை தீபத் திருநாளில்
#பனையோலைகொழுக்கட்டை🔥🔥🔥

Read Previous

கொழிஞ்சி செடி யாருக்கெல்லாம் தெரியும்..?? படித்ததில் பிடித்தது..!!

Read Next

ஆம்லெட்டுக்கு ஆம்லெட் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular