ஒரு தாத்தா வீடு
பேரனிடம்
ஒரு நல்ல மனிதனாக வளர வேண்டும் என்று சொல்கிறார்
நல்ல மனிதனாக வேண்டும் என்றால் பலபேர் பாராட்டவேண்டும்
புகழ் பெறவேண்டும் என்று சொல்கிறார்
சரி தாத்தா என்று ஒரு ரன்னிங் ரேஸ்
ஓடுகிறார்
இந்த ரேஸில் அவர் தொடர்ந்து வெற்றி பெறுகிறார்
உலகமே அவரை பாராட்டுகிறது
தாத்தா மட்டும்
நமட்டுச் சிரிப்பாக😀 சிரிக்கிறார்
என்னதான் செய்யவேண்டும் என்று கேட்க
கண் தெரியாத
வயதான
ஒரு பாட்டியுடன் நீ ஓடி ஜெயிக்க வேண்டும் என்று சொல்கிறார்
அவரும் அந்த ரன்னிங் ரேஸில் கலந்து கொள்கிறார்
ஆனால் அந்த பாட்டி புறப்பட்ட இடத்திலேயே இருக்கிறார்
இவர் வெற்றி பெற யாருமே கை தட்டவில்லை
அந்த பையனுக்கு கோபம் வருகிறது
நான் என்னதான் செய்வது என்று
கேட்க
உடனே மறுபடியும்
ஒரு ஊனமுற்ற ஒருவனுடன்
நீ ஓடி ஜெயிக்க வேண்டும் என்று சொல்கிறார் தாத்தா
அதிலும் அந்தப் பையன் வெற்றி பெறுகிறார்
உடனே ஊரே மௌனமாக இருக்கிறது
கோபமாகவும் இருக்கிறது பேரனுக்கு ஒன்றுமே புரியவில்லை
தாத்தாவிடம் ஒன்றும் புரியவில்லை என்ன செய்வது என்று சொல்லுங்கள் என்று
கேட்க
சிந்தித்து செயல்படு என்று சொல்கிறார் தாத்தா
அந்த பேரன்
அந்த கண் தெரியாத பாட்டி மற்றும் ஊனமுற்ற சிறுவன்
இவர்களை
சுமந்து அழைத்துக்கொண்டு மெல்ல மெல்ல
அந்த எல்லைக்கோட்டை
தொடுகிறார்
தாத்தாவுடன்
சேர்ந்து
ஊரே
கை தட்டுகிறது
மகிழ்ச்சியில்
பெரிய
மகிழ்ச்சி
பிறரை
மகிழ்ச்சி செய்வதே




