கல்யாணத்துக்குப் பிறகு இருக்கும் வாழ்க்கையைப் பற்றிய ஒரு முக்கியமான பதிவு..!! நம்மில் பலரும் இதையெல்லாம் கடந்து தான் வந்திருப்போம்..!!

எல்லோருக்கும் கல்யாணத்திற்க்கு முன்னால் நினைத்தது எதுவும் நடக்காது

1. கல்யாணத்திற்க்கு பிறகு நீங்க எதிர்பார்த்த கனவுலக வாழ்க்கை இருக்காது. பல ஏமாற்றங்கள் இருக்கும்.

2. கல்யாணத்திற்க்கு முன்னால் பணத்தின் முக்கியத்துவத்தை பற்றி கவலை பட்டு இருக்க மாட்டீர்கள். ஆனால் கல்யாணத்திற்க்கு பிறகு பணத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வீர்கள்.

3. திருமணத்திற்க்கு முன்னால், உங்கள் வாழ்க்கைத்துணையின் எல்லா குணங்கள், செய்கைகள் பிடித்து இருக்கும். திருமணம் செய்த பிறகு, வாழ்க்கை துணையின் பல விஷயம் பிடிக்காது.

4. காதல் வயபட்ட போது #வாழ்க்கை துணையை பிரிந்து இருப்பது நரகமாக இருக்கும். கல்யாணத்திற்க்கு பிறகு இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் அவரவர்கள் வேலையை பார்த்து கொண்டு இருப்பீர்கள்.

5. கல்யாணத்திற்க்கு முன்னால் உங்கள் வாழ்க்கைத்துணையின் குடும்பத்தை உங்கள் குடும்பமாக பாவிப்பீர்கள். கல்யாணத்திற்க்கு பிறகு அவர்களை வேற்று மனிதராக கருதுவீர்கள்.

6. கல்யாணத்திற்க்கு முன்னால் பேசுவதற்க்கு நிறைய இருக்கும். கல்யாணத்திற்க்கு பிறகு பேசுவதற்க்கு தயக்கம் காட்டுவீர்கள்.

7. கல்யாணத்திற்க்கு முன்னால், உங்கள் வாழ்க்கைத்துணையின் பிறந்த நாட்களை விழாவாக கொண்டாடுவீர்கள். கல்யாணத்திற்க்கு பின்னால் பிறந்த நாள் எதுவென்று மறந்து போகும்.

8. கல்யாணத்திற்க்கு முன்னால், சண்டைக்கு பிறகு உடனே சமாதானம் ஆகி விடுவீர்கள். கல்யாணத்திற்க்கு

பிறகு, லேசில் சமாதானம் அடைய மாட்டீர்கள்.

9. கல்யாண வாழ்க்கையில் சந்தோசம் மட்டும் தான் இருக்கும் என்ற உங்கள் கனவு, கல்யாணத்திற்க்கு பிறகு தவிடுபொடி ஆகிவிடும்.

10. கல்யாணத்திற்க்கு முன்னால அனுசரணையாக நடக்கும் நீங்க, கல்யாணத்திற்க்கு பிறகு பல தடவை உங்கள் வாழ்க்கை துணைக்கு அதே அனுசரணையை காட்ட மாட்டீர்கள்.

இது பல கல்யாண வாழ்க்கையில் நடக்கும் யதார்த்தம். கற்பனைகளை ஓரம் கட்டி விட்டு, பொறுப்புகளை சுமக்க தயாராக வேண்டும். உங்கள் வாழ்க்கை துணையை, அவர்களின் நிறை குறைகளோடு அப்படியே ஏற்று கொள்ள வேண்டும். ஆயிரம் உறவுகள் உங்களை சுற்றி இருந்தாலும், உங்கள் வாழ்க்கை துணை தான் உங்களுடன் இறுதி வரை பயணிக்க போறாங்க என்ற உண்மையை உணர்ந்தாலே போதும், கல்யாண வாழ்க்கையின் அழகை புரிந்து கொள்வீர்கள்.

 

Read Previous

படித்ததில் பிடித்தது..!! ஆயாவின் நினைவை மனதில் அசை போட்ட தருணம்..!!

Read Next

சிந்திக்க வைக்கும் சிறுகதை..!! நம் பொறுப்பை நாமே பார்த்துக் கொண்டால் வாழ்வு இனிமையாக இருக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular