நெய்யில் ஊற வைத்த பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மை என்ன?..

சத்தான மரக்கறிகள் பழங்கள் சாப்பிடவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது.பேரீச்சையில் இரும்புச்சத்து மட்டுமல்ல, வட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளது. பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவைப்படும் போது பேரீச்சம்பழம் சாப்பிடுவது அதிக நன்மை தரும்.

நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்படுபவர்கள் பேரீச்சம் மருந்தாகப்பயன்படும். பேரீச்சம் பழம் தொடர்ந்து சாப்பிடுவதால் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும். எலும்புகளை பலப்படுத்தும். இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.

நெய் பசும்பாலில் இருந்த எடுக்கப்படுவதாகும். இந்த பேரீச்சம்பழத்துடன் சேர்த்து சாப்பிடம் போது நமது உடலுக்கு நன்மை பன்மடங்கு கிடைக்கின்றது. அத என்னென்ன நன்மை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேரீச்சம்பழம்,நெய்:

ஆயுர்வேதத்தில் பேரீச்சம்பழத்தை ஒரு மருந்தாக பயன்படுத்துகிறார்கள். இந்த பழங்கள் அதிக குளிர்ச்சி கொண்டதாகும். பேரீச்சம்பழம் நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

மேலும், கபம், வாதம் போன்றவற்றை நெய் குறைக்கும் என்று கூறப்படுகிறது. நெய் சுவைக்கு மட்டுமன்றி இது பதட்டத்தை குறைக்கவும், மன அழுத்தத்தைப் போக்கவும் உதவுகிறது மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கும் கொடக்கின்றது.

மலச்சிக்கலில் அவதிப்படுபவர்கள் நெய் மற்றும் பேரிச்சம்பழத்தை உங்கள் தினசரி வழக்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் செரிமான பிரச்சனையை சரி செய்து குடல் இயக்கத்தை சிராக்குகிறது.பேரீச்சம்பழத்தில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது, இது எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

நெய் மற்றும் பேரீச்சை சேர்த்து சாப்பிடுவதால் நம் மூட்டுகளுக்கு தேவையான லூப்ரிகன்ட் கிடைக்கும். இதன் காரணமாக பெண்கள் கர்ப்ப காலத்தில் இருக்கும் போது பேரீச்சம்பழத்தை சாப்பிட்டால் சேயும் தாயும் நலம் பெறுவார்கள்.

பேரிச்சம்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. நெய்யில் ஆன்டி- இன்ஃபிளமேட்டரி பண்புகள் உள்ளது. இவை இரண்டும் சேர்ந்து சாப்பிட்டு வந்தால், நோயெதிர்ப்பு மண்டலத்தைப்பலப்படத்தும்.

இதனால் அடிக்கடி நோய்கள் நம்மை தொற்றாமல் நாம் பாதகாப்பாக இருக்கலாம்.நெய்யில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பேரீச்சம்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஊட்டமளித்து நீரேற்றமாக வைத்திருக்கும்.

இது சருமத்தை பிரகாசமாக்கும்.உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் நெய் மற்றும் பேரிச்சம்பழத்தை தினமும் சாப்பிட வேண்டும். இதன் மூலம் உடல் எடை ஆரோக்கியமான முறையில் அதிகரித்து சருமம் பிரகாசிக்கும்.

Read Previous

நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ பணம் பதவி தேவையில்லை..!! நல்ல வாழ்க்கைத் துணை இருந்தாலே போதும்..!!

Read Next

பார்த்தாலே பசி எடுக்கும் நெத்தலி கருவாட்டு குழம்பு..!! இப்படி ஒரு முறை செய்து பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular