அம்மா உணவகங்களை புதுப்பிக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு..!! சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய தகவல்..!!
சாமானிய மக்களுக்காக குறைந்த விலையில் உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கில் மறைந்த முன்னாள் “முதலமைச்சர் ஜெயலலிதா” அவர்கள் 2013-ம் ஆண்டு “அம்மா உணவகம்” திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மேலும், சென்னையில் மட்டும் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அம்மா உணவகங்களில் புதிய மாற்றங்கள் கொண்டு வர உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, சென்னையில் செயல்பாட்டில் உள்ள 300 அம்மா உணவகங்களை புதுப்பிக்க “20 கோடி” ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களை இறுதி செய்துவிட்டதாகவும் “சென்னை மாநகராட்சி” அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு




