மனிதனுக்கு குரங்கு புத்தி உள்ளதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

அன்பு!!!!!!!!

இந்த உலகில் உங்களை அழிக்க
இன்னொருவருக்கு நீங்களே
கொடுக்கும் ஆயுதம் #அன்பு..!
இந்த உலகில் உங்களை நீங்களே
ஏமாற்றிக் கொள்வது இன்னொருவர்
மீது வைக்கும் நம்பிக்கை..!

அதே நம்பிக்கையை துளியாவது நம்மீது வைத்திருந்தால் என்றோ கரை கடந்திருப்போம்.

ஒரு பொய்யின் ஆழமே..
சிலரின் மேல் கொண்ட
நம்பிக்கையை அழிக்க
காரணம் ஆகின்றது..!
சொன்னது உண்மை இல்லை என்பதை விட சொன்னவர் யார் என்பதும் எப்படிப்பட்ட பொய் என்பதுமே எம் மனதில் ஆழமான வடுவாகி விடுகிறது.

பாம்பு தன் தோலை எத்தனை
தடவை உரித்தாலும் அது
எப்போதுமே பாம்பு தான்..
சில மனிதர்களை உங்கள்
வாழ்க்கையில் அனுமதிக்கும்
முன் இதை நினைவில் கொள்ளுங்கள்..!

வாழ்க்கையில் அடிபட்ட
பின்பு தான் சிலரின் உண்மையான
முகத்தை புரிந்து கொள்ள முடிகிறது..!
ஒரு தடவை அந்த அனுபவம் இருந்தால் வாழ்நாளுக்கும் போதுமானது. அதுவே வழக்கமாகிவிட்டால் நம்மைப் போல் முட்டாள்கள் இந்த உலகத்தில் இல்லை.

வனாந்திரம் போன்ற இந்த உலகத்தில் பிழைப்பதற்கு கொஞ்சம் புறாவைப் போல கபடம் அற்றவர்களாகவும் பாம்பைப் போல எப்போது அரவம் கேட்டாலும் வினாவுள்ளவர்களாயும் நரியின் தந்திரமும் சிங்கத்தின் தைரியமும் குழிமுசலின் பாதுகாப்பும் மானின் திட்டமிட்ட வேகமும் கட்டாயம் தேவை.
🐒🐒🐒🐒
மனிதனுக்கு குரங்கு புத்தி உள்ளதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்…

Read Previous

மருந்து மாத்திரை அட்டைகளில் சிவப்பு கோடு..!! உங்கள் பாதுகாப்பிற்கான அடையாளம்?..

Read Next

கழுத்தை நெரிக்கும் கடன்தொல்லையா?.. விடுபட இதை மட்டும் செய்தால் போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular