எந்த பருவத்திற்கு எந்த கீரை சாப்பிடக்கூடாது என்று உங்களுக்கு தெரியுமா..?? தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள்..!!

எந்த பருவத்திற்கு எந்த கீரை சாப்பிடக்கூடாது என்று உங்களுக்கு தெரியுமா..?? தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள்..!!

கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் ஆரோக்கியமான விஷயமாகும். இந்த காலகட்டத்தில் பலரும் கீரை என்றாலே சற்று நகர்ந்துதான் இருக்கின்றனர். ஏனென்றால் பலருக்கும் கீரை போன்ற உணவுகளை சுத்தமாக பிடிக்கவில்லை என்பது உண்மை. இந்நிலையில் எந்த பருவத்திற்கு எந்த கீரை சாப்பிடக்கூடாது என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை அதைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

கோடை காலத்தில் அரைக்கீரை மற்றும் புளிச்சக்கீரை முற்றிலுமாக நாம் தவிர்க்க வேண்டும். காற்று அதிகம் உள்ள காலங்களில் அரைக்கீரை கீரைத்தண்டு மற்றும் சிறுகீரை மற்றும் பருப்பு கீரை குறிப்பாக முள்ளங்கி கீரை போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது. முன் பனிக்காலங்களான ஆவணி புரட்டாசி போன்ற காலங்களில் சிறுகீரை, பருப்பு கீரை, வெந்தயக்கீரை, முள்ளங்கி கீரை மற்றும் பசலைக்கீரை ஆகியவற்றை ஒருபோதும் சாப்பிடாதீர்கள். பின் மழைக்காலங்களான ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் அகத்திக்கீரை மற்றும் சிறுகீரை மற்றும் பசலைக்கீரை ஆகியவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது. பின் பனிக்காலங்களான மாசி பங்குனி போன்ற காலங்களில் சிறுகீரை பசலைக்கீரை மற்றும் பரப்பு கீரையை தவிர்க்கலாம். முன்பனி காலங்களான மார்கழி தை மாதங்களில் அகத்திக்கீரை மற்றும் சிறுகீரை மற்றும் பசலைக்கீரை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

எல்லா வகையான பருவங்களிலும் சாப்பிடக்கூடிய கீரைகள்:
பொன்னாங்கண்ணிக் கீரை
கொத்தமல்லி கீரை
முருங்கைக்கீரை
மணத்தக்காளி கீரை
புதினா மற்றும் கருவேப்பிலை இவற்றையெல்லாம் எல்லா பருவங்களிலும் சாப்பிடலாம்.

Read Previous

ஆண் தர்பூசணி.. பெண் தர்ப்பூசணி.. எதை வாங்கணும்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

உங்களின் பாஸ்போர்ட் எக்ஸ்பைரி தேதி நெருங்கி விட்டதா?.. அப்போ தவறாம உடனே இதை செய்யுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular