தற்போதைய நவீன காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களின் பயன்பாடானது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் பயனர்களை வியக்க வைக்கும் வகையில் புது புது அப்டேட்களை வழங்கிய வண்ணம் உள்ளது. இந்த சூழ்நிலையில் அந்த நிறுவனம் ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது போட்டோக்களை இனி Whats app-ல் ஸ்டேட்டஸ் வைக்கும் போது, அதில் இசையை சேர்க்கும் வசதி புதிதாக வரவுள்ளது. 15 வினாடிகள் வரையிலான போட்டோஸ், வீடியோக்களுக்கு இசையைச் சேர்க்க முடியும். அதுவும் நாம் விரும்பும் ஆடியோவைத் தேடி பெறுவதற்கான Optionம் வழங்கப்படவுள்ளது. தற்போது, இந்த அம்சம் Beta டெஸ்டர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. விரைவில் அனைத்து யூசர்களுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




