உழைத்து உடம்பின் வியர்வையில் ஒட்டும் பணமே இன்பத்திற்கு அலாதி..!! படித்ததில் பிடித்தது..!!

மாத இறுதியில்
பணப் பை
பல் இளிக்க;
கர்பிணியினைப் போல்
முட்டிக்கொண்டு;
விலாச அட்டைகள்;
குடும்ப நிழற்படங்கள்
மட்டுமேத் துணையாக!
இறந்துப்போனத்
தலைவர்களின்
புகைப்படங்கள்
புன்னகைக்க;
வெற்றுக் காகிதங்களும்;
விலைமதிப்பாகி;
எங்களையே விலைப்பேசி!
தேசம் மாறி;
பெயர்கள் மாறி;
பணத்தின் மதிப்புகள்
மாறினாலும்;
எடைப்போடும்
மதிப்புக்கல்
சட்டைப்பையில்
பிதிங்கி நிற்கும்
பணம்மட்டும்தான்!
விலைப்போகும்
மனிதனுக்கு;
வலை வீசும்
ரூபாய் நோட்டுகள்;
உழைத்து உடம்பின்
வியர்வையில் ஒட்டும்
பணமே இன்பத்திற்கு அலாதி;
ஏய்த்துப் பிழைக்க
எண்ணினால் வரும்
மனதிற்கு எண்ணிலடங்கா
வியாதி!

Read Previous

கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணி வாக்குவாதம்..!! நடுரோட்டில் பேருந்தை நிறுத்திய நடத்துநர்..!!

Read Next

கல்யாணமாகி ரொம்ப வருஷமா குழந்தை இல்லையா?.. அப்ப முருகனுக்கு இந்த விரதம் மட்டும் எடுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular