கல்யாணமாகி ரொம்ப வருஷமா குழந்தை இல்லையா?.. அப்ப முருகனுக்கு இந்த விரதம் மட்டும் எடுங்க..!!

கல்யாணமாகி ரொம்ப வருஷமா குழந்தை இல்லையா: இன்றைய சூழ்நிலையில் ஒரு மனிதனின் மிகப்பெரிய கவலையாக இருந்து வருவது குழந்தையின்மை பற்றி தான். கல்யாணமாகி பல ஆண்டுகள் ஆன போதிலும் வயிற்றில் ஒரு புழு பூச்சி கூட உருவாகவில்லை என்று வருத்தமடையும் எத்தனையோ பெண்கள் இன்னும் நாட்டில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஒரு கடத்தில் பெண்கள் குழந்தை இல்லையே என்று கவலைப்படுவதை விட நாலு பேரு நாலு விதமாக பேசி மலடினு பட்டம் கட்டி விடுவார்களே என்று தான் அச்சப்படுகிறார்கள். மேலும் குழந்தையை கேட்டு ஏறாத மலை இல்லை போகாத கோவில் இல்லை என்று பல பேர் சொல்லி நாம் கேட்டிருக்கிறோம். அப்படி குழந்தை இல்லாமல் தத்தளிக்கும் தாய்மார்களுக்கு தான் இந்த தொகுப்பு.

குழந்தை வேகமாக பிறப்பதற்கு நம் முன்னோர்கள் சில வழிமுறைகளை பின்பற்றி வந்துள்ளனர். அதில் ஒன்று தான் கந்த சஷ்டி விரதம். திருமணம் ஆகி நீண்ட காலங்கள் குழந்தை இல்லாமல் இருப்பவர்கள் சஷ்டி விரதம் இருந்தால் உடனே குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். எனவே குழந்தை இல்லாத தாய்மார்கள் ஒரு வாரத்திற்கு அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

பின்னர், பூஜை அறையில் இருக்கும் தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு மாலை அணிவித்து கந்த சஷ்டி கவசத்தை படிக்க வேண்டும்.

இப்படி தொடர்ந்து ஆறு நாட்களுக்கு நீங்கள் படித்தீர்கள் என்றால் கண்டிப்பாக குழந்தை வரம் கிட்டும் என்பது தான் ஐதீகமாக உள்ளது.

குறிப்பாக அந்த ஒரு வாரத்திற்கு காலை எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக  இருக்க வேண்டும்.

மதியம் சிறிதளவு சாதம் சாப்பிட்டு, இரவு நேரத்தில் பழங்களை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி நம்ம வாய் சும்மா இருக்கும் வேளைகளில் ஓம் சரவணபவ, ஓம் முருகா, வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, வேலும் மயிலும் துணை போன்ற மந்திரங்களை இசை பாடி கொண்டே இருந்தால் மிகவும் நல்லது.

மேலும் விரத நேரங்களில் டீ காபி போன்றவை குடிக்க கூடாது. ஏன் வாயில பச்சை தண்ணீர் கூட படக்கூடாது.

இரவு நேரத்தில் சிறிதளவு பால் பருகி கொள்ளலாம். இப்படி முழுமையாக விரதம் இருந்தால் பெண்களுக்கு குழந்தை வரம் ஈசியாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Read Previous

உழைத்து உடம்பின் வியர்வையில் ஒட்டும் பணமே இன்பத்திற்கு அலாதி..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

மஞ்சள் கலந்த கருப்பு மிளகு பாலில் இவ்ளோ ஆரோக்கிய நன்மைகளா?.. இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular