வெங்காய வடை:
முதலில் அரிசி 1டேபிள் ஸ்பூன் மற்றும் உளுத்தம் பருப்பு1 கப் எடுத்து ஒரு மணி நேரம் ஊற வையுங்கள்.பின்னர் ஆட்டுக்கல்லில் போட்டு நன்கு பதமாக அரைத்து விடுங்கள்.அதில் சிறிதாக நறுக்கிய வெங்காயம்அரை கப், மிளகாய்2, இஞ்சி1 துண்டு , கறிவேப்பிலை பெருங்காயம் உப்பு தேவைக்கேற்ப சேர்த்து நன்கு பிசையுங்கள்.
செய்முறை:
கேஸ் அடுப்பை சிம்மில்(நடுத்தர தீ) வைத்து காயும் எண்ணெயில் சிறு சிறு வடைகளாக போட்டு பொன்னிறமானதும் எடுத்துப் பரிமாறுங்கள். மொறுமொறுவென்று இருக்கும் இதன் சுவை ஒரு தனிரகம் தான்.




