பத்து நிமிடத்தில் எளிதாக செய்யக்கூடிய மாங்காய் பச்சடி..!! கண்டிப்பா இப்படி ட்ரை பண்ணி பாருங்க…!!
மாங்காய் என்பது பெரியவர்களில் இருந்து சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். இந்நிலையில் இதை வைத்து அருமையான மாங்காய் பச்சடி 10 நிமிடத்தில் எப்படி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மாங்காய் பச்சடி செய்ய தேவையான பொருட்கள்:
மாங்காய் – 2
வெங்காயம் – 1
வர மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
வெல்லம் – தேவைக்கேற்ப
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை – தேவையான அளவு
மாங்கா பச்சடி செய்வதற்கு முதலில் மாங்காயை நன்றாக தோல் நீக்கி சின்ன சின்னதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்பு அடுப்பைப் பற்ற வைத்து ஒரு கடாயில் வெந்தயம் மற்றும் கடுகு சேர்த்து நன்றாக வறுத்து அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து சின்ன சின்னதாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு எடுத்து வைத்திருந்த மாங்காய் துண்டுகளை சேர்த்து தேவையான அளவு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்க வேண்டும். மாங்காய் நன்றாக வெந்து குலைந்து வரும்போது அதில் பொடி செய்து வைத்த வெள்ளத்தை தூவி வெல்லம் நன்றாக உருகி வரும் போது அரைத்து வைத்திருந்த வெந்தயக் கடுகு பொடியை தூவி அடுப்பை ஆப் செய்தால் சுவையான மாங்காய் பச்சடி ரெடி. இந்த மாங்காய் பச்சடி குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.




