நீரை சுத்திகரிக்கும் தேற்றான்கொட்டை..!!
கண்டிப்பாக அனைவரும் படித்து பயன்பெறுங்கள்..!!
இந்த நவீன காலகட்ட உணவு முறைகளில் அனைத்து உணவுகளிலும் கெமிக்கல் சம்பந்தமான உரங்கள் மற்றும் கலப்படங்கள் இருக்கிறது. உணவில் மட்டுமல்லாது நீரிலும் கூட இருக்கிறது. இது நம் உடலின் ஆரோக்கியத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரிவதே இல்லை. இந்நீரை இயற்கையான முறையில் வீட்டிலேயே நீரை எவ்வாறு சுத்திகரிக்கலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
குடிக்கும் நீரை சுத்திகரிக்க பலவிதமான செயற்கையான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் இயற்கை நமக்கு அளித்த கருவி தான் தேற்றான் விதைகள் ஆகும். வெண்கல பானை அல்லது சில்வர் பானை அல்லது செம்பு பானை அல்லது மண்பானைகளில் தேவையான அளவு தேற்றான் கொட்டையை எடுத்து அரைத்து நீரில் கரைத்து விட அது அனைத்து கிருமிகளையும் நீக்கி தூய்மையான தண்ணீரை நமக்குத் தரும். அதுமட்டுமின்றி இந்த தேற்றான் விதைகளோடு விளாமிச்சை வேர் மற்றும் வெட்டிவேர் போன்ற மூலிகைகளையும் ஒரு துணியில் போட்டு கட்டி அதை நாம் குடிக்கும் தண்ணீரில் உள்ள பாத்திரத்தில் போட்டு வைக்க சுத்தமான சுவையான சுத்திகரித்த குடிநீரை அது நமக்குத் தருகிறது. குறிப்பாக நாம் குடிக்கும் தண்ணீர் செம்பு அல்லது வெண்கலம் போன்ற பாத்திரங்களில் இருப்பது மிகவும் நல்லது.ஏனென்றால் செம்பு மற்றும் வெண்கலம் போன்ற பாத்திரங்கள் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டவை. தேற்றான் கொட்டை மாசுகளை நீக்கி நீரை தெளிவித்து நீரை சுத்திகரித்து நீரை சுவை மிக்கதாக நமக்குத் தருகிறது. எனவே அனைவரும் இதை இயற்கையான முறையில் பயன்படுத்தி பயன் பெறுங்கள்.




