திருமணம் மோதிரத்தை எந்த கையில் அணிய வேண்டும் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் நிச்சயதார்த்தம் என்னும் நிகழ்வு நடக்கும் போது மோதிரம் அணிவது பழக்கம் இல்லை. ஆனால், இந்த காலகட்டத்தில் எல்லாம் நிச்சயதார்த்தத்தின் போது கண்டிப்பாக மோதிரம் அணிகிறார்கள். அப்படி அணியும் மோதிரத்தை எந்த கையில் அணிய வேண்டும் என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
திருமண நிச்சயதார்த்தத்தின் போது அணியும் மோதிரம் வலது கையில் பெண்கள் அணிவது மிகவும் நல்லதாம். வலது கையில் திருமணம் மோதிரத்தினை அணிவதன் மூலம் எதிர்மறை சக்தியை விலக்கி தம்பதிகளுக்குள் நேர்மறை சக்தி அதிகரிக்கும் என்றும் திருமணத்திற்கான பாதுகாப்பு மற்றும் ஆசீர்வாதங்கள் இந்த வலது கையில் அணிவதன் மூலம் கிடைக்கும் என்றும் முன்னோர்கள் கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி இவ்வாறு வலது கையில் திருமணம் மோதிரத்தை அழிவதன் மூலம் கணவரின் மீது அதிகமான அன்பு மற்றும் காதல் கொண்டதை வெளிப்படுத்தும் முறையாகவும் கூறப்படுகிறது. எனவே பெண்கள் திருமணம் மோதிரத்தை இடது கையில் அணிவதை விட வலது கையில் அணிவது மிகவும் சிறந்தது.




