பிறக்கும் குழந்தையின் தொப்புள் கொடியில் தாயத்து செய்து குழந்தைகளுக்கு அணிவிப்பதற்கான மருத்துவ காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பிறந்த குழந்தைகளின் வயிற்றிலிருந்து காய்ந்து உதிரும் தொப்புள் கொடியை தாயத்தில் வைப்பார்கள் வளர்ந்த பிறகு நோய் தாக்கினால் அந்த தொப்புள் கொடியை பொடி செய்து கொடுத்தால் நோய் குணமாகும் என நம்பினர். தொப்புள் கொடி ரத்தம் அதிக அளவு மூலச் செல்களை கொண்டுள்ளன. சில ஆராய்ச்சியாளர்கள் நரம்பியல் கோளாறுகள், திசு சேதம் போன்ற ரத்த நோய்களுக்கு தொப்புள் கொடியில் இருக்கும் ஸ்டெம் செல்கள் பயன்படும் என்கின்றனர்.




