நாம் அனைவருக்கும் பிடித்த சிற்றுண்டியான பால்பன் எப்படி செய்வதென்று தெரியுமா..!! சுலபமான செய்முறை..!!

தென்மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு மிகுந்த பிடித்தமான, பெரும்பாலான கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒரு சிற்றுண்டி தான் பால்பன். இன்று பால்பன் செய்வது எப்படி என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

தேவையானவை:

மைதா மாவு – 1 கிண்ணம்,

சர்க்கரை – 1 கிண்ணம்,

ஏலக்காய் தூள் – 1 கரண்டி,

தயிர் கப் – கால் கப்,

நெய் – 2 கரண்டி,

உப்பு – தேவையான அளவு,

பேக்கிங் சோடா – சிறிதளவு,

எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

முதலில் சர்க்கரையை முக்கால் பங்கை ஜாரில் சேர்த்து நன்கு அரைத்த பின்பு இதனுடன் மைதா, ஏலக்காய், தயிர், பேக்கிங் சோடா, உப்பு, நெய் சேர்த்து கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும்.  அதற்க்கு பின் கடாயில் மீதமுள்ள சர்க்கரை சேர்த்து, நீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

கடைசியாக கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின், கலந்து வைத்திருக்கும் மாவை உருண்டையாக சேர்த்து பொறித்த பின்பு சர்க்கரை பாகில் சேர்க்கவும். அவ்வளவுதான், சுவையான பால்பன் தயார்.

Read Previous

கடலைக்கறி குழம்பை இப்படி செய்து பாருங்கள்..!! அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய செய்முறை..!!

Read Next

Accenture-யில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! இப்போதே விண்ணப்பிக்கவும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular