சமையல் ருசியா இருக்க இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணி பாருங்க..!!

Oplus_131072

 

சமையலில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலும் சரி புதிதாக சமைக்க கற்றுக் கொண்டு இருப்பவர்களாக இருந்தாலும் சரி கண்டிப்பாக இந்த சமையல் குறிப்புகளை எல்லாம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மாவு புளித்து விட்டது தோசை ஊற்ற முடியாது என்னும்போது ஒரு கைப்பிடி அவலை ஊற வைத்து சிறிதளவு மிளகு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து பால் விட்டு நன்றாக அரைத்து அதனை புளித்த தோசை மாவில் சேர்த்து ஊத்தப்பமாக ஊற்றி பாருங்கள். புளிப்பே இருக்காது. அந்த ஊத்தாப்பம் மிகவும் மென்மையாக இருக்கும்.

எந்த ஒரு இனிப்பு வகையை செய்ய விரும்பினாலும் சர்க்கரையின்
அளவை குறைத்துக் கொண்டு அதற்கு பதிலாக கற்கண்டை பொடி ஆக்கி அதனை அந்த இனிப்பு வகையில் சேர்த்துக் கொண்டால் சுவை கூடுதலாக இருக்கும்.

முட்டைகோஸ் சமைக்கும் பொழுது அதன் வெள்ளை நிறம் மாறி சுவையும் மனமும் இல்லாமல் போய்விடும் அப்படி மாறாமல் இருப்பதற்கு ஒரு இஞ்சியை சேர்த்து சமையுங்கள். அதன் மனம் மாறாமல் அப்படியே இருக்கும்.

காலிஃப்ளவரை சமைக்கும் பொழுது அதில் ஒரு துளி அளவு பால் சேர்த்துக் கொள்ளுங்கள். அப்படி பால் சேர்த்து சமைத்த அந்த காலிஃப்ளவரானது வெள்ளை கலர் மாறாமல் அப்படியே இருக்கும் பச்சை வாடை வராது.

இட்லி மாவு ஒரு சிலருக்கு புளித்து போய்விடும் அப்படி இட்லி மாவு புளிக்காமல் இருக்க வெற்றிலையை காம்பு இல்லாமல் மாவு பாத்திரத்தில் கீழ்நோக்கி பார்த்தவாறு இரண்டு இலைகளை போட்டு விட வேண்டும். இரண்டு நாட்களுக்கு பொங்காமலும் புளிக்காமலும் மாவானது அப்படியே இருக்கும்.

வெயில் காலத்தில் பெருங்காயத்தூள் வாங்கி நாம் பயன்படுத்தினால் பெருங்காயத்தூள் அப்படியே இருக்கும். அதுவே பெருங்காய கட்டி வாங்கி பயன்படுத்தினால் வெயில் காலத்தில் பெருங்காயம் இன்னும் கட்டி ஆகிவிடும். இப்படி கட்டியாகாமல் இருக்க பெருங்காயத்தில் பச்சை மிளகாயை காம்போடு அப்படியே போட்டு விட வேண்டும்.

Read Previous

குறட்டையை நிறுத்தும் இயற்கை மருந்து..!! குறட்டை விடுபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

சுவையான தட்டப்பயிறு கத்தரிக்காய் புளிக்குழம்பு எப்படி செய்வதென்று உங்களுக்கு தெரியுமா..!! அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய செய்முறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular