நமது சிறுபிள்ளை பருவத்தில் இருந்து தற்போது வரை, நமது வாழ்நாட்களில் நாம் பலவிதமான புளியோதரைகளை சாப்பிட்டது உண்டு. இவற்றை வீட்டில் செய்தால் சுவையுடன் இருக்கும். கோவில் ஸ்டைலில் சாப்பிட புளியோதரை வேண்டும் என பலமுறை நாம் நினைத்திருப்போம். இன்று ஆந்திரா ஸ்டைலில் புளியோதரை செய்வது எப்படி என இந்த பதிவில் காண்போம்.
தேவையானவை:
வடித்த சாதம் – 3 கப்,
புளி – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
பச்சை மிளகாய் – 3,
கறிவேப்பில்லை – சிறிதளவு,
மஞ்சள் தூள் – 1 கரண்டி,
நல்லெண்ணெய் – 3 கரண்டி,
கடுகு, உளுந்து – 2 கரண்டி,
கடலைப்பருப்பு – 4 கரண்டி,
காய்ந்த மிளகாய் – 6,
பெருங்காயம் – சிறிதளவு,
எள்ளு – 1 கரண்டி,
மல்லாட்டை – 3 கரண்டி,
செய்முறை:
முதலில் புளியை ஊறவைத்து கரைத்து எடுத்துக்கொள்ளவும். இந்த கரைசலில் பச்சை மிளகாய், கறிவேப்பில்லை, மஞ்சள் தூள், நல்லெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து மூடி வைக்க வேண்டும்.
அதன் பின் வானெலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், மல்லாட்டை, எள்ளு, பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு சிவக்க வறுக்கவும்.
இதனுடன் கரைத்து வய்த்து இருக்கும் புளிக்கரைசலை சேர்த்து உப்பு போட்டு, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவேண்டும். பின் சாதத்தில் புளிக்கரைசலை சேர்ந்து கிளற வேண்டும். அவ்வளவுதான், சுவையான ஆந்திரா ஸ்டைல் புளியோதரை ரெடி.




