இந்த ஊறுகாயை யாராச்சும் செஞ்சு இருக்கீங்களா..!! தயிர் சாதத்திற்கு மிகச்சிறந்த சைடு டிஷ்..!!

நம் உடலுக்கு இஞ்சி சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது என்று நம் அனைவருக்கும் தெரியும். இஞ்சி சாப்பிடுவதன் மூலம் பசியின்மையை போக்கி நேரத்திற்கு பசியை தூண்டும். அதுமட்டுமில்லாமல் செரிமான கோளாறுகள் உங்களுக்கு இருந்தால் அதையும் இந்த இஞ்சி சரி செய்யும். ஆனால் இதை சிலருக்கு பிடிக்காது. ஆனால் அப்படி பிடிக்காது என்று கூறுபவர்களுக்கு கூட இந்த ஊருக்கு மிகவும் பிடித்து விடும். அப்படி இந்த இஞ்சி ஊறுகாயை எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.

தேவையானவை :

நல்லெண்ணெய் – 100 ml

இஞ்சி – 1 கப் ( துருவியது )

வர மிளகாய் – 10 அல்லது 15

புளி – 1/2 கப்

வெல்லம் – 1/2 கப்

உப்பு – தேவையான அளவு

கடுகு – 2 தேக்கரண்டி

வெந்தயம் – 1 தேக்கரண்டி

பெருங்காயம் தூள் – 1/2 தேக்கரண்டி

கருவேப்பிலை – 1 கொத்து

செய்முறை :

முதலில் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு கடாயை வைத்து வெந்தயம் மற்றும் கடுகு சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும். அதை ஒரு ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதே கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து அந்த நல்லெண்ணெய் சூடானதும் தோல் நீக்கி துருவியை இஞ்சியை சேர்த்து நன்றாக வதக்கவும். அதன்பின் புலி மற்றும் வரமிளகாய் சேர்த்து வதக்கவும். அது ஆரிய பின் சுத்தமான அம்மியில் பேஸ்டை போல அரைத்துக் கொள்ளவும். உங்களுக்கு தேவைப்பட்டால் இடையில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

மற்றொரு கடாயில் 50 மில்லி நல்லெண்ணெய் ஊத்தி கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்த பின் இந்த இஞ்சி கலவையை சேர்க்கவும். அந்த கலவை வதங்கிய பின் தேவையான அளவு உப்பு சேர்த்து நாம் முன்பே அரைத்து வைத்திருக்கும் பெருங்காயம் மற்றும் கடுகு தூளை சேர்த்து வெள்ளம் சேர்த்து கிளற வேண்டும். பின் அதில் சிறிதளவு பெருங்காயம் சேர்க்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பின் கடாயை கீழே இறக்கி வைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான இஞ்சி ஊறுகாய் தயார்.

Read Previous

உங்களின் சருமம் பொலிவுடன் இருக்க வேண்டுமா..!! அப்போ இதை எல்லாம் செய்யுங்க..!!

Read Next

ஹைதராபாத் அணியின் பரிதாப நிலை..!! 5 போட்டிகளில் 4 போட்டியில் படு தோல்வி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular