இந்த ஆம்லெட்டை சாப்பிட்டு இருக்கிறீர்களா..!! முட்டை இல்லாமல் அசத்தலான செய்முறை..!!

நமக்கு அசைவம் என்றாலே மிகவும் பிடிக்கும். அது மட்டன் என்றாலும் சரி முட்டை என்றாலும் சரி. எப்போதும் சாப்பிட்டு முடித்த பிறகு நாம் கேட்பது ஆம்லெட் தான். ஆனால் இந்த ஆம்லெட்டை ஒரு சில நாள் நம்மளால் சாப்பிட இயலாது. அதாவது அசைவம் சாப்பிடாமல் இருக்கும் நாட்களில் ஆம்லெட் சாப்பிட நம்மளால் முடியாது.  அதனால் முட்டை இல்லாமல் ஆம்லெட்டை எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.

தேவையானவை: 

கடலை மாவு – 1 கிண்ணம்,
வெங்காயம் நறுக்கியது – 2,
தக்காளி நறுக்கியது – 1,
பச்சை மிளகாய் நறுக்கியது – 2,
கொத்தமல்லி தழை, கறிவேப்பில்லை – சிறிதளவு,
மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு,
மிளகாய் தூள், கரம் மசாலா – 1/4 கரண்டி,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: 

ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் கொடுக்கப்பட்டுள்ள வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை முதலில் சேர்த்துக் கொள்ளவும். அதன்பின் கடலை மாவு மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா எண்ணெய் உப்பு போன்றவற்றை சேர்த்து நீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதை 10 நிமிடங்கள் ஊறவைத்து தோசை கல்லில் ஊற்றி வேக வைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான சுலபமான சைவ ஆம்லெட் தயார்.

Read Previous

நீங்கள் ஐஸ்கிரீமை விரும்பி சாப்பிடுவீர்களா..!! உங்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் அதிகமாக இருக்கிறது..!!

Read Next

புளியை சாப்பிடுவதனால் இத்தனை நன்மைகளா..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular