நாம் பல பேர் இரவில் மீந்து போன இட்லியை மறுநாள் கீழே கொட்டியோ அல்லது இட்லி உப்புமா செய்தோதான் இருப்போம். அதேபோல தான் தோசையும். ஆனால் இந்த தோசையை கீழே மட்டும் தான் கொட்ட முடியும். அதை வைத்து என்ன செய்வது என்று நமக்கு தெரியாது. இன்று நாம் மீந்து போன தோசையை வைத்து சுவையாக ஒரு உணவு சமைப்பது எப்படி என்று இந்த பதிவில் காண்போம்.
தேவையானவை:
கல் தோசை – 4,
வெங்காயம் – 3,
தக்காளி – 2,
இஞ்சி பூண்டு விழுது – 2 சிறிய கரண்டி,
மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள் – 1 கரண்டி,
மிளகுத்தூள், கரம் மசாலா – 1/2 கரண்டி,
பச்சை மிளகாய் – 3,
கறிவேப்பில்லை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
கடுகு, உளுந்து – தாளிக்க.
செய்முறை:
முதலில் கல் தோசையை சிறிது சிறிதாக பரோட்டா போல வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் தக்காளி வெங்காயம் கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறிதாக நறுக்கி கொள்ள வேண்டும். அடுத்து கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து சேர்த்து முதலில் தாளிக்க வேண்டும். பின் அதில் இஞ்சி பூண்டு விழுது வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் உட்பட காய்களை அடுத்தடுத்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதை நன்கு வதக்க வேண்டும். தக்காளி நன்றாக குலைந்து வந்ததும் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா மிளகுத்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து சில நிமிடம் மிதமான சூட்டில் வதக்க வேண்டும். பின் அதில் வெட்டி வைத்திருக்கும் தோசையை சேர்த்து கிளறி கொத்தமல்லி தலையை தூவ வேண்டும். அவ்வளவுதான் சுவையான சுலபமான சில்லி தோசை தயார்.




