கோதுமை மாவில் இடியாப்பம் செய்து இருக்கிறீர்களா..!! சுவையான மற்றும் சத்தான செய்முறை..!!

இடியாப்பம் என்றால் இங்கு பல பேருக்கும் பிடிக்கும். ஆனால் அதை செய்ய சோம்பேறித்தனம் படுவார்கள். தினமும் காலையில் எந்திரித்தவுடன் தோசை அல்லது இட்லியையே சாப்பிடும் குழந்தைகள் அதை வெறுத்து விடுவார்கள். இன்று இடியாப்பத்தை கோதுமையை வைத்து எப்படி வித்தியாசமாக செய்வது என்று காண்போம். இது சுவையாக மட்டுமில்லாமல் மிக சத்தானதாகவும் இருக்கும்.

தேவையானவை:

கோதுமை மாவு – 1 கப்,
அரிசி மாவு – ¼ கப்,
உப்பு – சிறிதளவு,
தண்ணீர் – தேவையான அளவு,
எண்ணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு கடாயில் கோதுமை மாவை போட்டு சிறிது வறுத்தெடுக்கவும். பின் அதில் அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து விடவும். இடியாப்பம் புலியும் கருவியில் மாவை நிரப்பி இட்லி தட்டில் இடியாப்பத்தை பிழிந்து விடவும். இதனை அடுப்பில் வைத்து பத்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான கோதுமை மாவு இடியாப்பம் தயார்.

Read Previous

பித்தப்பையில் உள்ள கற்களை கரைக்க இதை மட்டும் குடிங்க போதும்..!!

Read Next

வெந்தயக் கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular