கடந்த ஐந்து போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்வியை பெற்று வருகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் வருத்தத்திலும் கோபத்திலும் இருக்கின்றனர். மேலும் கடந்த போட்டியிலிருந்து ருத்துராஜ் கையில் ஏற்பட்ட காரணமாக இந்த தொடரில் இருந்தே வெளியேறிவிட்டார். அதனால் நேற்று நடந்த போட்டியில் கூட மகேந்திர சிங் தோனி தான் கேப்டனாக செயல்பட்டார்.
தொடர் தோல்வி பெற்று வருவதால் ரசிகர்களின் கோபம் எல்லை மீறி போய்க்கொண்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஒரு சில பிற அணி ரசிகர்கள் தோனியையும் மற்ற வீரர்களையும் அளவுக்கு மீறி சமூக வலைத்தளங்களில் கேலி செய்து வருகின்றனர். இதற்கு முன்னால் இந்திய வீரர் இர்ஃபான் பத்தான் தோனி ஒரு சாம்பியன் கிரிக்கெட்டர். இவரின் மூலமாக இந்திய அணி பல கோப்பைகளை பெற்றுள்ளது.
ஒரு வீரரை விமர்சிக்க ரசிகர்களுக்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால் ஒரு வீரரை கேலி செய்ய உரிமை இல்லை. தோனியை பற்றி சமூக வலைத்தளங்களில் தவறாக கூறுவது சரியல்ல என்று கூறியுள்ளார். என்னதான் ரசிகர்களுக்கு கோபம் இருந்தாலும் வீரர்களை மரியாதையுடன் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.



