நமது வீடுகளை சுத்தம் செய்வது மிகவும் சிரமமான காரியம் ஆகும். அதிலும் குளியலறையும் கழிவரையையும் சுத்தம் செய்வது மிகவும் கடினமான காரியமாகும். அங்கு படிந்திருக்கும் உப்பு கறைகளை நீக்குவது கடுமையான காரியமாக இருக்கும். மேலும் சுவற்றிலும் தரைப்பகுதியிலும் இருக்கும் கருப்பு நிற கரைகளை நம்மால் சுத்தப்படுத்த முடியாது. மேலும் அந்த கரைகள் முகம் சுளிக்க வைக்கும்.
இதை சுத்தம் செய்ய ரசாயனங்களை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் இது நமது வீட்டில் இருக்கும் தரைக்கும் சுவருக்கும் பெரும் பாதிப்பை விளைவிக்கும். அது மட்டும் இல்லாமல் யார் அந்த ரசாயனத்தை பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் ஏற்படும். இதை நாம் மிக சுலபமாகவே செய்து முடித்து விடலாம்.
சீயக்காய், புளித்த தயிர் மற்றும் ஷாம்பு ஆகியவற்றை பயன்படுத்துவது சிறந்ததாகும். ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் சீயக்காய் தூள் புளித்த தயிர் மற்றும் சாம்பு ஆகியவற்றை சேர்த்து கரைகள் படிந்து இருக்கும் இடத்தில் அதை ஊற்றி 15 நிமிடங்கள் ஊறவைத்து தேங்காய் நாரை கொண்டு தேய்க்கவும். அவ்வளவுதான் நமது வீட்டில் இருக்கும் கழிவறையின் செவுருகள் புதுசு போல பிரகாசம் அளிக்கும்.




