ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா..!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் 2d என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் படம் எடுக்கப்பட்டு வரும் மே ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆகப்போகும் படம் தான் ரெட்ரோ. இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்தின் போஸ்டர்களோ முன்னோட்டமோ அல்லது பாடல்களோ வெளியாகும் போதெல்லாம் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மேலும் இன்று நடிகர் சூர்யா என்ன பேசப்போகிறார் என்றும் ஆவலாக காத்திருக்கின்றனர். படத்தின் இயக்குனரும் கதாநாயகியும் கொடுத்து வரும் பேட்டிகளை பார்த்து ரசிகர்கள் படத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் இருந்து வெளியான கண்ணாடி பூவே கனிமா தி ஒன் என்ற மூன்று பாடல்களும் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.

இன்று மற்ற பாடல்களும் வெளியாக இருக்கும் வேலையில் ரசிகர்கள் அதற்காக காத்திருக்கின்றனர். மேலும் இன்று இசை வெளியீட்டு விழாவில் இந்த படத்தின் டிரைலரும் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் இன்னும் பேரின்பத்தில் இருக்கின்றனர். கடந்த சில படங்கள் சூர்யாவிற்கு சரியாக போகாததால் இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Read Previous

மும்பையின் அசுர ஆட்டம்..!! திணறி போன ஹைதராபாத்..!!

Read Next

கருப்பு மொச்சையை சாப்பிடுவதனால் இத்தனை பயன்களா..!! மக்களே கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular