நமது முன்னோர்கள் ஒண்ணும் முட்டாள்கள் இல்லை என்பதை உணர வைத்த அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

1. கழிவறையும், குளியலறையும் வீட்டிற்குள் வைக்காமல் கொல்லைபுறத்தில் வைத்தார்கள். ஏன்?
– பெயர் வைக்காத கண்ணுக்கு தெரியாத கிருமிகள்.

2. சலூனுக்கும், சாவுக்கும் சென்று வந்தால் எதையும் தொடாமல் குளித்தபின் வீட்டிற்குள் வந்தார்கள். ஏன்? -கிருமிகள்.

3. செருப்பை வீட்டின் வெளியே விட்டார்கள். ஏன்? -கிருமிகள்.

4. பள்ளிக்கும், வெளியேயும் சென்று வந்தால் கைகால் கழுவி வீட்டிற்குள் வர சொன்னார்கள். ஏன்? -கிருமிகள்.

5. பிறந்தாலோ, இறந்தாலோ தீட்டு என்று 10, 16 நாட்கள் தனிமைபடுத்தினர். ஏன்? -கிருமிகள்.

6. சாவு வீட்டில் சமைக்க கூடாது என்றார்கள். ஏன்? -கிருமிகள்.

7. குடும்பத்திற்கு சமைக்கும் பெண்கள் குளித்துவிட்டு சமைத்தார்கள். ஏன்? -கிருமிகள்.

8. வாசல் பெருக்கி சாணம், மஞ்சள் தெளித்து கோலமிட்டார்கள். ஏன்? -கிருமிகள்.

9. மண், செம்பு, வென்கல பாத்திரங்களை உபயோகித்தார்கள். ஏன்? -கிருமிகள்.

10. வீட்டில் சமைத்த உணவையே பெரும்பாலும் உண்டார்கள். ஏன்? -கிருமிகள்.

தனிமனித ஆரோக்கியம், சமூகத்தில் சுத்தம், அண்டை அயலாரோடு அகலாது அனுகாது உறவாடுதல் போன்ற நம் மூதாதையர் வாழ்வியல் நெறியை கிண்டலடித்து, திட்டமிட்டு சிதைத்து நாகரீகம் எனும் பெயரில் அதற்கான விலையை இன்று கொடுத்து கொண்டிருக்கிறோம்.
இனியாவது இத்தலைமுறையினர்

“மூத்தோர் சொல் வார்த்தையும், முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின்பு இனிக்கும்”என்பதை உணர வைத்த பதிவு.

Read Previous

நம் உடலுக்கு நாமே தேடிக் கொண்ட கெட்ட பழக்கங்கள் என்னென்ன தெரியுமா..??

Read Next

தொப்புளில் எண்ணெய் விடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular