காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது என்று நமக்கு நன்றாகவே தெரியும். என்னதான் பாகிஸ்தான் இந்த தாக்குதலுக்கு பிறகு அவர்கள் இல்லை என்று கூறினாலும் இந்தியா அதற்கான ஆதாரங்களுடன் பிற நாடுகளிடம் பாகிஸ்தான் தான் இதற்கு காரணம் என்று கூறி வருகிறது.
பாகிஸ்தான் எப்போதும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் என்று நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். இதுவரை நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் பாகிஸ்தான் ஒரு முக்கிய பணியை ஆற்றி இருக்கிறது. அந்த வகையில் இன்று ஐநா சபையில் பாகிஸ்தான் செயல்பாட்டை வன்மையாக கண்டித்து ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர துணை பிரதிநிதி யோஜனா பட்டேல் பேசியிருக்கிறார்.
பாகிஸ்தானின் அமைச்சரே பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாக ஒப்புக்கொண்டதை சுட்டிக்காட்டி பேசியுள்ள அவர் காட்டுத் தனமாக அந்நாட்டின் செயல்பாடுகள் உள்ளதாகவும் ஐநாவில் கூறியுள்ளார். உலகளாவிய மன்றத்தை பயன்படுத்தி இந்தியா மீது பாகிஸ்தான் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




