முதுமை என்பது வரமா ? சாபமா ?
வரம்
1.நோயில்லா உடல் இருந்தால் ;
2.போதிய அளவு பணம் இருந்தால் ;
3.கணவனும் மனைவியும் ஒரே இடத்தில் இருந்தால் ;
4.மகனும் மருமகளும் போதிய அளவு கவனித்தால் ;
5.மகளும் மருமகனும் ஆதரவாக இருந்தால்;
6.உடன்பிறந்தோர் ஒற்றுமையாக இருந்தால் ;
7.நினைவாற்றல் சரியாக இருந்தால்;
8.சம வயது தோழர்கள் அவ்வப்போது தொடர்பில் இருந்தால்;
9.கோயில்கள் சென்று இறை வழிபாடு செய்ய முடிந்தால்;
10.படுத்தவுடன் தூக்கம் வந்தால் ;
11.மலச்சிக்கலும் மனச்சிக்கலும் இல்லாமல் இருந்தால்;
12.வீட்டிலும் வெளியிலும் கீழே விழாமல் இருந்தால்
முதுமை என்பது வரம்! .
இவற்றுக்கு எதிர்மறையாக மேற்சொன்ன 12 ம் இருந்தால் முதுமை என்பது சாபம்!



