இன்றைய கால கட்டத்தில் சேமிப்பு என்பது இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. அதை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் அமலில் உள்ளது. குறைந்த பணம் செலுத்தி நீண்ட காலத்திற்கு சேமிப்பதன் மூலம் பெரும் தொகையை பாலிசி முடியும் காலத்தில் பெற்றுக்கொள்ள முடியும். சிறு தொகை முதலீடு செய்பவர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது பெரும் பலன் தரும் ஒன்றாகும். மியூச்சுவல் ஃபண்டில் 15-15- 30 என்ற விதியை பின்பற்றினால் எளிதாக 10 கோடி ரூபாய் சேர்க்க முடியும்
மாதந்தோறும் 15 ஆயிரம் ரூபாயை ஆண்டுக்கு 15 சதவீதம் லாபம் தரும் ஒரு முதலீட்டு நிதியில் 30 ஆண்டுகள் முதலீடு செய்தால் 10 கோடி ரூபாய் கிடைக்கும். அதேபோல் மாதத்திற்கு 1.5 லட்சம் முதலீடு செய்ய முடியும் என வைத்துக் கொண்டால் , இந்த 30 ஆண்டுகளில் ஒரு நபரால் மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் மட்டுமே 100 கோடி ரூபாயை லாபமாக பெற முடியும்.
மாதந்தோறும் 15 ஆயிரம் ரூபாயை ஆண்டுக்கு 15 சதவீத லாபம் தரக்கூடிய ஒரு மியூச்சுவல் ஃபண்டில் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் 1 கோடி ரூபாய் கிடைக்கும். இதன்படி ஒருவர் செய்த முதலீட்டுத் தொகை 27 லட்சம் ரூபாயாக இருக்கும் அதுவே அவருக்கு கிடைத்த லாபம் 74 லட்சமாக இருக்கும். 15 ஆண்டுகாலம் முடியும்போது 1 கோடி ரூபாயை பெற முடியும்.




