காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் போர் நடந்து நேற்று மதியத்திற்கு மேல் முடிவு பெற்றது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். இதை சிலர் வரவேர்த்தும் சிலர் விவாதித்தும் வருகின்றனர். அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் பாகிஸ்தான் அத்து மீறியும் இருக்கிறது.
இது மட்டுமில்லாமல் பாகிஸ்தானின் பிரதம மந்திரி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது இந்தியாவுடன் ஆன போரில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாகவும் இந்தியாவிடம் இருந்த 50 ரஃபேல்களை அளித்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதைக் கேட்ட பாகிஸ்தான் மக்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும் இது பொய் என்று பலருக்கு நன்றாகவே தெரியும்.
காரணம் இந்த போரில் இந்தியாவின் கையே ஓங்கி இருந்த வேலையில் பாகிஸ்தான் மோசமான நிலையில் இருந்தது. அது மட்டும் இன்றி இந்தியாவிடம் இருப்பதோ 34 ரஃபேல்கள்தான். ஆனால் பாகிஸ்தான் பிரதமரோ 50 ரபேல்களை அளித்ததாக கூறியிருந்தார். இதனால் இவரை நெட்டிசன்களும் பிற நாட்டு மக்களும் கேலி செய்து வருகின்றனர்.



