இந்தியா பாகிஸ்தான் போர் கடந்த சில நாட்களாக கடுமையாக நடந்து வந்தது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். பாகிஸ்தான் இரவு நேரங்களில் ட்ரோன்களை வைத்தும் ஏவுகணைகளை வைத்தும் இந்தியாவை தாக்க முயற்சித்ததும் இந்தியா அதற்கு தக்க பதிலடி கொடுத்தது நாம் அறிந்ததே.
அந்த வகையில் நேற்று மதியத்திற்கு மேல் விக்ரம் மிஸ்ரி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது இந்தியா பாகிஸ்தான் போர் முடிவு பெற்றதாகவும் 5 மணிக்கு மேல் அது அமல்படுத்தப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். அதன் பிறகு இரவு நேரங்களில் ஒரு தகவல் வெளியாகியிருந்தது.
அதாவது ஜம்மு காஷ்மீர் பஞ்சாப் குஜராத் ராஜஸ்தான் ஆகிய எல்லை பகுதிகளில் ட்ரோன் அட்டாக் நடத்தப்பட்டதாகவும் பாகிஸ்தான் போரின் விதிமுறையை அத்துமறியதாகவும் அனைவரும் கூறினர். ஆனால் இன்று அதிகாரப்பூர்வமாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. எல்லைப் பகுதிகளில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் எந்த தாக்குதலும் பாகிஸ்தானால் நேற்று இரவு நடத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



