இந்த நவீன காலத்தில் குறுகிய நேரத்தில் ஏதேனும் ஒரு குழம்பை ஆரோக்கியமாக வைக்க முடியும் என்றால் நாம் அதை நிச்சயம் பயன்படுத்துவோம். அப்படி இன்று வெறும் பத்து நிமிடத்தில் செய்யக்கூடிய தக்காளி குழம்பை எப்படி செய்வது என்று தெளிவாக காண்போம்.
தேவையான பொருட்கள்:
தக்காளி – 4
பச்சை மிளகாய் – 1
சின்ன வெங்காயம்- 15
பூண்டு – 10பல்
பொடியாக துருவிய தேங்காய் – சிறிதளவு,
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு – தாளிப்புக்கு,
பெரிய வெங்காயம் – 1 ,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
முதலில் ஒரு கடாய் எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள் சீரகத்தூள், தனியாத்தூள் மிளகாய்த்தூள் கடைசியாக தேங்காய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
வதங்கிய பின் ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாய் எடுத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு கடுகு உளுந்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து தாளித்த பின்னர் பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் பூண்டு கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்த நன்கு வதக்கவும்.
அது வதங்கிய பின்பு அரைத்து வைத்திருக்கும் கலவையை சேர்த்து உப்பு போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். அவ்வளவுதான் சுவையான தக்காளி குழம்பு தயார்.




