சைவ பிரியர்களே..!! அசத்தலான சைவ ஆம்லெட் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்..!!

நம் அனைவருக்கும் ஆம்லெட் என்றாலே மிகவும் பிடிக்கும். ஆனால் அசைவத்தை சாப்பிடாமல் இருப்பவர்கள் இந்த ஆம்லெட்டை சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கெல்லாம் மிகவும் பிடிக்க வைக்கும் சைவ ஆம்லெட் எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.

தேவையான பொருட்கள்: 

கடலை மாவு – 1 கிண்ணம்,
வெங்காயம் நறுக்கியது – 2,
தக்காளி நறுக்கியது – 1,
பச்சை மிளகாய் நறுக்கியது – 2,
கொத்தமல்லி தழை, கறிவேப்பில்லை – சிறிதளவு,
மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு,
மிளகாய் தூள், கரம் மசாலா – 1/4 கரண்டி,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: 

ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

இதனுடன் கடலை மாவு மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா எண்ணெய் உப்பு ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு நீர் ஊற்றி கலக்கி வைத்துக் கொள்ளவும்.

இதை பத்து நிமிடம் ஊற வைத்து கொள்ளவும். ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடான பிறகு சிறிதளவு எண்ணெய் சேர்த்து இதை ஆம்லெட்டை போல் ஊற்றி இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான சைவ ஆம்லெட் தயார்.

Read Previous

பெற்றோர்களே..!! இந்த வெயில் காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி தரப் போகிறீர்களா..!! இதை நிச்சயம் படியுங்கள்..!!

Read Next

காலையில் எழுந்தவுடன் எலுமிச்சை பழ சாறையும் தேனையும் தண்ணீரில் கலந்து குடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா..!! நிச்சயமாக இதை படியுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular