Oplus_131072
வீட்டிலேயே கரம் மசாலா செய்வது எப்படி….
கரம் மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
கரம் மசாலா செய்ய தேவையான பொருட்கள்
♠ பிரியாணி இலை = 4 அல்லது 5
♠ பச்சை ஏலக்காய் = 15 அல்லது 20
♠ முழு தனியா = 1/2 கப்
♠ கருப்பு ஏலக்காய் = 6 அல்லது 7
♠ இலவங்கப்பட்டை= 3
♠ லவங்கம் = 1 ஸ்பூன்
♠ ஜாவித்ரி பூ = 5 அல்லது 6
♠ மிளகு = 1 ஸ்பூன்கரம்
மசாலா பொடி செய்முறை:
அடுப்பில் ஒரு வாணலி வைத்து, அதில் மல்லி, பட்டை, கிராம்பு , ஏலக்காய் , சோம்பு, மிளகு , சீரகம், கல்பாசி சிறிதளவு, ஜாதிபத்திரி இரண்டு, மராத்தி மூக்கு மூன்று, ஜாதிக்காய் ஒரு சிறிய துண்டு, அண்ணாச்சி பூ ஐந்து, கருப்பு ஏலக்காய இரண்டு மற்றும் பிரிஞ்சி இலை இரண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
வதக்கும் போது அடுப்பை மிதமான தீயில் வைத்து தான் வதக்க வேண்டும். வாணலியில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் ஓரளவு வாசனை வந்த பிறகு அடுப்பை அணைத்து நன்றாக ஆறவைக்கவும்.
வறுத்த மசாலா பொருட்கள் நன்றாக ஆறிய பிறகு மிக்சி ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்றாக பவுடர் போல் அரைத்துக்கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் உங்கள் தெருவே மணக்க கூடிய கரம் மசாலா தயார், அரைத்த கரம் மசாலாவை உடனே டப்ப்பாவில் போட்டு அடைத்து வைக்க வேண்டாம், அவற்றில் இருக்கும் வெப்பம் தணியும் வரை நன்கு ஆறவைத்து பின்பு டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.
இந்த கரம் மசாலா பொடி குருமா குழம்பு, சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு, சப்பாத்தி குருமா போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். கண்டிப்பாக உங்கள் வீட்டில் இந்த முறையில் ஒரு முறை கரம் மசாலா பொடி ட்ரை பண்ணி பாருங்க.



