வாழை இலை கொழுக்கட்டை செய்வது எப்படி ..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

வாழை இலை கொழுக்கட்டை செய்வது எப்படி …..

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி – 200 கிராம்

சர்க்கரை – 100 கிராம்

துருவிய தேங்காய் – மூடி

நெய் – 1 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் – 2 பொடி செய்தது

உப்பு – 1 சிட்டிகை

வாழை இலை – சிறிதளவு

செய்முறை:

புழுங்கல் அரிசியை ஊற வைத்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக மை போல கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.ஒரு ‌கி‌ண்ண‌த்‌தி‌ல் துருவிய தேங்காய், சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்துக் கலந்து பூரணம் செய்து கொள்ளவும்.வாணலியில் நெய்யை சூடாக்கி, அரைத்த மாவை அதில் போட்டு இளந்தீயில் வதக்கிக் கொள்ளவும்.சூடு ஆறினதும் சிறு உருண்டைகளாக்கி, பூரிக்கு இடுவது போல வட்டமாக இட்டுக் கொள்ளவும்.

அதன் நடுவே பூரணத்தை வைத்து மூடவும். வாழை இலையை சிறு துண்டுகளாக்கி ஒவ்வொரு துண்டிலும் மாவை வைத்து இலையை மடக்கி நூலால் கட்டிக் கொள்ளவும்.எண்ணெய் தடவிய இட்லி தட்டில் இவற்றை அடுக்கி வைத்து ஆவியில் வேகவைக்கவும்.உடலு‌க்கு ஆரோ‌க்‌கியமான கொழு‌க்க‌ட்டை‌த் தயா‌ர்.

Read Previous

வீட்டிலேயே கரம் மசாலா செய்வது எப்படி..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க இல்லத்தரசிகளே..!!

Read Next

நாம் உண்ணும் உணவே நமக்கு மருந்து அது எப்படி தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular