நாம் புரிந்து வைத்திருக்கும் பொருள் :-
“ஒரு தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால், அதை மாமியார் பெரிதுபடுத்தி
விடுகிறார்” என்பதாகும்.
ஆனால்….
“மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம் ..!
மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம்..!” என்பது தான் உண்மையான பழமொழி.
விவசாயி வீட்டில் மாமியார் நிலத்தில் இறங்கி உழைத்தால் உரத்துக்கான வருமானம் வரும் .
மாமியாருடன் மருமகளும் சேர்ந்து உழைத்தால் பொன் வாங்கும் அளவுக்கு வருமானம் உயரும் என்பது அர்த்தம்.




