உங்களுக்கு தலைமுடி அதிகமாக உதிர்கிறதா..!! இதுதான் காரணம்..!!

இந்த காலத்தில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சனை தான் தலைமுடி உதிர்வு. முடி வளர்ச்சியை வைத்தே ஒருவரின் உடல் நலத்தை கணிக்க முடியும் என்று பலர் கூறி வருகின்றனர். தலைமுடி உதிர்விற்கு பெரும்பாலும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவையே காரணமாக இருக்கிறது.

அது மட்டும் இலலாமல் ரசாயனம் கலந்த ஷாம்பூ கண்டிஷனர் பயன்படுத்துவதும், அதிக சூடான வெந்நீரில் குளிப்பதும் தான் காரணமாக இருக்கிறது. தினமும் தலைக்கு குளிக்கும் பழக்கம் இப்போது பரவி வருகிறது. ஆனால் ஒருவரின் முடியின் தன்மை மற்றும் தலையில் அரிப்பு பொடுகு தொல்லை ஏற்பட்டால் தினமும் தலைக்கு குளிக்கலாம். தலைமுடி வறட்சியாக இருந்தால் தினமும் தலைக்கு குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

ரசாயனம் அதிகமாக இருக்கும் ஷாம்புகளை பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கையான சீயக்காய் கொண்டு தலைமுடியை நன்கு அலசவும். இது நமது உடலுக்கு குளிர்ச்சி தரும். இது மட்டுமில்லாமல் மன அழுத்தம் கூட முடி உதிர்வுக்கு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Read Previous

தஞ்சை ஸ்பெஷல் தவளை அடையை சாப்பிட்டு இருக்கிறீர்களா..!! அசத்தலான செய்முறை இதோ..!!

Read Next

உங்களுக்கு மதியம் அதிகமாக தூக்கம் வருகிறதா..!! இந்த பதிவை நிச்சயம் பாருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular