நம்மில் பல பேருக்கு மதியம் உணவு உண்ட பிறகு தூக்கம் அதிகமாக வரும். மதியம் சிறிது நேரம் தூங்கினால் உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படும். மதிய உணவுக்கு பிறகு தூக்கம் மிக அவசியம் என்று பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இதைப் பற்றி ஆய்வு செய்துள்ள அமெரிக்க தேசிய தூக்க அறக்கட்டளை மனிதன் ஒரு நாளைக்கு தினமும் இரண்டு முறை தூங்குகிறான், காலை 2 மணி முதல் 7:00 மணி வரையும் மதியம் 2 மணி முதல் 5 மணி வரையும் தூக்கம் வரும். இதில் காலை நேரத்தில் எந்தவித பிரச்சனையும் இருக்காது.
ஆனால் மதியம் தூங்கும் வாய்ப்பு எல்லோருக்கும் அமைவதில்லை. பொதுவாகவே சாப்பிட்ட பிறகு ஜீரணிக்கும் வேலையை உடல் மேற்கொள்வதால் அந்த நேரத்தில் உடல் மயக்க நிலைக்கு செல்லுவதால் தூக்கம் வருகிறது. இதற்கு காரணம் மெலடோனின் போன்ற ஹார்மோன்கள் தான்.
அதிலும் பெண்களுக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வு அதிகமாக இருக்கும் காரணத்தினால் மாதவிடாய் காலத்தில் மிகவும் சோர்வாக இருப்பார்கள். இதனால்தான் பெண்களுக்கு உணவு உண்டவுடன் அதிகமாக தூக்கம் வருகிறது. அதுமட்டுமில்லாமல் நீரிழிவு தைராய்டு ரத்த சோகை பிரச்சனை யாருக்கேனும் இருந்தால் அவர்களும் மதியம் நிறைய தூங்குவார்கள்.




