அதிக சுவையுடன் இருக்கும் சோமாஸ் செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
தேவையான பொருட்கள் :
ஒரு முழு தேங்காயை பொறிக்கும் அளவுக்கு எண்ணெய்
2 ஏலக்காய்
அரை கப் சர்க்கரை
1 டீஸ்பூன் நெய்
அரை கப் ரவை
கால் கப் பொட்டுக்கடலை
2 டீஸ்பூன் சூடான எண்ணெய்
1 கப் மைதா மாவு
உப்பு தேவையான அளவு
செய்முறை :
ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் மைதா மாவு ரவை சர்க்கரை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை ஒன்றாக கலந்து சூடான எண்ணெயையும் தண்ணீரையும் சேர்த்து பிசைந்து ஊற வைக்கவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து பொட்டுக்கடலையை அதில் போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்து விடவும். ரவையை வறுத்து அதில் நெய்யை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை தனியாக எடுத்து வைத்துக்கொண்டு சர்க்கரையையும் ஏலக்காயையும் மிக்ஸியில் நன்றாக அரைத்து தேங்காயை வறுத்துக் கொள்ளவும்.
சர்க்கரை அரைத்த பொட்டுக்கடலை வறுத்த ரவை தேங்காய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து தயார் செய்து வைத்துள்ள மாவை சப்பாத்தி போன்று போட்டு சோமாஸ் போன்று வடிவமைத்து அதனுள் பூரணத்தை வைத்து மூடி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான சோமாஸ் ரெடி.




