இப்போது இருக்கும் காலத்தில் பெரியவர்களுக்கு மட்டுமில்லாமல் சிறியவர்களுக்கும் முடி நரைத்து இருக்கிறது. இதற்கு காரணம் ரசாயனம் கலந்து ஷாம்பு உபயோகிப்பதும் தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பதும் தான். ஆகையால் இன்று இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி இரண்டு தேக்கரண்டி டீத்தூள் சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும். தண்ணீர் நிறம் மாறிய பிறகு இறக்கி விடவும்.
மிக்ஸியில் இரண்டு கைப்பிடி மருதாணி மூன்று லவங்கம் பத்து மிளகு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்த டீ தூள் தண்ணீரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு ஒரு பவுலில் அரைத்த கலவையுடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கி விடுங்கள். இதை பத்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
பிறகு இந்த பேஸ்டை தலைமுடியின் வேர் பகுதியில் படும்படி நன்கு மசாஜ் செய்து தடவ வேண்டும். ஒரு மணி நேரம் தலையில் ஊற விட்ட பிறகு அலசி விடுங்கள். வாரத்திற்கு ஒரு முறை இப்படி செய்தால் தலைமுடி கருமை பெறும்.




