அடிக்கடி கை கால் மரத்துப் போவதற்கு இதுதான் காரணம்..!!
இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் அடிக்கடி கை மற்றும் கால் மரத்து போகும். அவ்வாறு மரத்துப் போகும்போது இருக்கும் வலி மிகவும் வேதனையை உண்டாக்கும். இந்நிலையில் இப்படி அடிக்கடி கை மற்றும் கால் மரத்துப் போவதற்கு என்ன காரணம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
ரத்த ஓட்டம் தடைபடுவதால் வலி தசைப்பிடிப்பு உணர்வின்மை செரிமான பிரச்சனைகள் மற்றும் கைகள் அல்லது கால்கள் மரத்துப்போவது போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். எனினும் ஒரு சில உணவுகள் மூலம் ரத்த ஓட்டத்தை சீராக்க முடியும். எனவே சரியான ரத்த ஓட்டத்தை உறுதி செய்ய ஒருவர் செய்ய வேண்டிய சில பயனுள்ள உணவு மாற்றங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். மீனில் உள்ள ஒமேகா-3 அமிலங்கள் செயல்பாட்டிற்கு நன்மை பயக்கும் அவை ரத்தக்குழாய்களை ரத்த கட்டிகளில் இருந்து தடுக்கின்றன. ரத்த அழுத்தத்தை பராமரிக்கின்றன இது ரத்த ஓட்டம் மற்றும் சுழற்சியை எளிதாக்குகிறது. வஞ்சரம் கானாங்கெளுத்தி சூரை மற்றும் ட்ரவுட் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா திரி அமிலங்கள் நிறைந்துள்ளன.




