வால்நட்டை ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா..??

Oplus_131072

 

வால்நட் ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய ஒரு ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.இதை அப்படியே சாப்பிடலாம். இதில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், கார்போஹைட்ரேட் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

இந்த வால்நட்டை ஊறவைத்து சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றது. தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.தினசரி வால்நட்டை நம்முடைய டயட்டில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தலைமுடி ஆரோக்கியம் மேம்படும். தலைமுடி உறுதியாகவும் வலுவாகவும் மாறும்.வால்நட்டில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் இருக்கின்றன. அதேபோல இரும்புச் சத்து, ஜிங்க், பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆகியவை நிறைந்திருக்கின்றன.வால்நட் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கச் செய்கிறது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் அதிகப்படியான கலோரிகள் எடுத்துக் கொள்வது தவிர்க்கப்படும்.தினமும் 4 ஊறவைத்த வால்நட்டுகளை சாப்பிட்டு வருவதன் மூலம் எலும்புகள் உறுதியாக இருக்கும். தசை வளர்ச்சியும் அதிகரிக்கும். எலும்பின் அடர்த்தியும் அதிகரிக்கும்.முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்த வால்நட்டை அடுத்த நாள் இரவில் சாப்பிட்டு வருவதால் வேகமாக வயதாவதும், வயதாவதால் உண்டாகும் ஆரோக்கியப் பிரச்சினைகளையும் தடுத்து நிறுத்துகிறது.வால்நட்டை ஊறவைத்து தினமும் சிறிதளவு சாப்பிட்டு வரும்போது மன ஆரோக்கியம் பெருமளவில் மேம்படும்.

Read Previous

அதிகாலை எழுவதால் உண்டாகும் பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

எல்லாம் உன்னுடையது தான்.. ஆனால் எதுவும் உனக்கு சொந்த இல்லை..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular