நீங்கள் ஓய்வுபெற்றவரா..?? உங்கள் பிள்ளைகளுக்கான கடமைகளை முடித்துவிட்டீர்களா..?? அப்போது இந்தப் பதிவு உங்களுக்குத்தான்..!!

Oplus_131072

இரண்டாவது_ஓட்டத்திற்கு தயாராகுங்கள்…..
நீங்கள் ஓய்வுபெற்றவரா…?
உங்கள் பிள்ளைகளுக்கான கடமைகளை முடித்துவிட்டீர்களா.?
அப்போது இந்தப் பதிவு உங்களுக்குத்தான்….‌

1. #பிள்ளைகளுக்கு திருமணம் முடித்துக் கொடுத்தப் பின்பு, அவர்களோடு சேர்ந்து வாழவேண்டும் என்று ஒருபோதும் ஆசைப்படாதீர்கள்.‌‌… அப்படியானால் உங்கள் சுயமரியாதையையும் சுதந்திரத்தையும் பறிகொடுக்கத் தயாராகி விட்டீர்கள் ……

2. #உங்கள் பேரக் குழந்தைகள் மீது உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ( நம் பிள்ளைகள் நமக்காகப் பிறந்தவர்கள் அல்ல… நம் வழி பூமிக்கு வந்தவர்கள்… பகவத்கீதை கூற்று இது)

நமக்கு அனுபவமும் அக்கறையும் அதிகம் உண்டுதான்… பேரப் பிள்ளைகள் மீதுள்ள அதீதப் பற்றில் , குழந்தைகள் வளர்ப்பதில் உங்கள் பிள்ளைகளுக்குக் கூட அறிவுரை வழங்காதீர்க்கும்…. அவமானத்தையே சந்திப்பீர்கள்.‌‌…

3. #ஐயோ! அவர்களுக்கு எதுவும் தெரியாதே என்று பதறாதீர்கள்…. அவர்கள் சிறகு முளைத்தப் பறவைகள்… விழுந்து எழுந்து முயன்று அவர்கள் பறக்கட்டும். அதற்கான வலிமையை அவர்கள் வளர்த்துக் கொள்ளட்டும்… எவ்வளவு நாட்களுக்கு உங்களால் சுமக்க இயலும்… உண்மையில் நீங்கள் சுமந்து அவர்களை பலவீனமானவராக தன்னம்பிக்கை அற்றவர்களாக மாற்றுகிறீர்கள்….

4. #பொருள் இல்லார்க்கு இவ்வையகம் இல்லை…. இல்லானை இல்லாளும் வேண்டாள் மற்றும் ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்…. செல்லாது அவன் வாயிற் சொல்..‌…. உங்களிடம் பணம் இல்லை என்றால் உங்கள் பிள்ளைகள் வீட்டு பணியாட்கள் மற்றும் செல்லப்பிராணிக்குக் கிடைக்கும் கவனிப்பும் மரியாதையும் கூட உங்களுக்குக் கிடைக்காது.. ஆதலால் உறுதியாக இறுதிவரை உங்கள் சேமிப்பையும் , உங்கள் பெயரில் உள்ள சொத்துக்களையும் உங்கள் பெயரிலேயே உங்கள் கையிருப்பாக தக்கவைத்திருங்கள்‌..‌.

5. #உங்கள பிள்ளைகளுக்காக பல தியாகங்களை செய்திருப்பீர்கள்‌… பல நல்ல வாய்ப்புகளை இழந்திருப்பீர்கள்….. சின்னச் சின்ன ஆசைகளைக் கூட துறந்திருப்பீர்கள்…. அவற்றை அவர்களிடம் சொல்லிக் காட்டாதீர்கள்…. நமது கடமையை சரிவர செய்தோம்… அந்தத் திருப்தியில் மகிழ்ச்சி அடையுங்கள்…..

6. #கூட்டுக் குடும்பம் சிதைந்துபோன காலக் கட்டத்தில் நாம் வாழ்கிறோம்…. நிச்சியம் நம்மிடமும் நம் பிள்ளைகளிடமும் , பகிர்ந்து கொள்ளுதல், சகித்துக் கொள்தல் என்றப் பண்பு நீர்த்துப் போய்விட்டது…. ஆதலால் பாசம் இருப்பினும் பேரப் பிள்ளைகளை விட்டு விலகியே இருங்கள்…‌ அவ்வப்போது பிள்ளைகள் வீட்டுக்குச் சென்று பேர்பிள்ளைகளோடு மகிழ்ந்திருங்கள் … இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் அங்கு தங்கிவிடாதீர்கள்…. நீங்கள் அவர்களுக்கு பளுவாகப் படுவீர்கள்…..

7. #எந்த சந்தர்ப்பத்திலும், உங்கள் மருமகள் அல்லது உங்கள் மருமகன் முன்பு உங்கள் வாழ்க்கைத் துணைவரின் குறைகளை எடுத்துச் சொல்லாதீர்கள்….‌ அவர்கள் முன்பு எந்த சந்தர்ப்பத்திலும் உங்கள் வாழ்க்கைத் துணைவரை விட்டுக் கொடுத்துவிடாதீர்கள்….‌

8. #பிள்ளைகள் வீட்டிற்குச் செல்லும்போது, உங்களுக்குத் தேவையான உடைகள், கைக்குட்டை, துண்டு, சோப்பு, எண்ணெய், சீப்பு, சாம்பு, பவுடர், தைலம், ( ஆணாக இருப்பின் முகச் சவரத்திற்கு தேவையானவை), முக்கியமாக மருந்து மாத்திரைகள் மற்றும் உங்கள் தேவைக்குச் சற்று அதிகமாகவே பணத்தையும் எடுத்துச் செல்லுங்கள்…‌

9.#உங்கள் பெற்றோர் அனாக்களுக்கு புரண்ட வர்கள், அவர்கள் உழைப்பு உங்களை பத்து இருபதிற்கு புரள வைத்தது.. உங்கள் உழைப்பு, உங்கள் பிள்ளைகளை நூற்றில் புரள வைத்தது…. உங்கள் பேரபபிள்ளைகள் நவீன கார்ப்பரேட் உலகில் வாழ்கிறார்கள்… ஆயிரம் என்ன, இலட்சத்தில் கூட புரள்வார்கள்…. அவர்கள் செலவு செய்யும்போது, ஆடம்பரச் செலவு என்று விமர்சிக்காதீர்கள்…. சேமிப்பின் அவசியம் பற்றி அறிவுரை கூறாதீர்கள்…. உங்களைவிட அவர்கள் வாழ்க்கைத் தரம் மிகவும் உயர்ந்துள்ளது….இன்று அதிகம் செலவழித்தால் வரும் பற்றாக்குறையை சமாளிக்க அவர்கள் கற்கட்டும்… அதை இழப்பீடு செய்ய அவர்கள் நிச்சயம் முயற்சி எடுப்பார்கள்..‌‌ நம்மைவிட அவர்கள் அறிவாளிகள் திறமைசாலிகள் என்பதை பூரணமாக நம்புங்கள்….

10. #நீங்கள் பல பட்டங்கள் பெற்றிருக்கலாம்…. உயர்ந்த பதிவியில் இருந்து ஓய்வு பெற்றிருக்கலாம்…. இருந்தாலும் அவர்கள் பார்வையில் நீங்கள் தற்குறியாகவே அடையாளப் படுத்தப்படுவீர்கள்….. அவர்கள் முன் முட்டாள்களாகவே இருங்கள் அல்லது முட்டாளாகவே நடித்துக் கொள்ளுங்கள்….

11. #உங்கள் உடல்நலத்தை பேணுங்கள்… தேவையான உடற்பயிற்சி செய்யுங்கள்… உங்கள் ஆரோக்கியத்திற்கான உணவை உட்கொள்ளுங்கள்…. அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்து சிறு உபாதை இருப்பினும் அதற்கு தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளும்…..
வாழும் காலம் வரை நம் கை கால்களே நமக்குதவி…‌ படுக்கையில் வீழ்ந்தால்… நம்மை நம் பிள்ளைகள் பாரமாக நினைத்து நம்மை பந்தாடும் நிலையை காணும் துர்பாக்கியத்தை தவிர்த்திடுங்கள்…..

#நான்_சொல்வது #பலருக்குத்_தவறாகப் #படலாம்..
#ஏனென்றால்
நமது தசைநார்கள் இரத்த நாளங்கள் பாசப் பற்றால் பிணைக்கப்பட்டவை‌.‌ ஆதலால் ஆலோசனை கூறுவது அனைவர்க்கும் எளிது… கடைபிடிப்பது மிக மிகக் கடினமே….
இருந்தும் முயற்சியுங்கள்…
உங்கள் வாழ்க்கையை நீங்கள் இனியேனும் வாழுங்கள்.‌‌

நமது இறுதி பயணத்திற்கு எப்போது வேண்டுமானாலும் பயணச் சீட்டு கொடுக்கப்படும் ….

வாழ்கை முழுவதும் பிள்ளைகளுக்காக ஓய்வின்றி ஓடிவிட்டீர்கள்….

உங்களுக்கு மட்டுமான இந்த இரண்டாவது ஓட்டத்திற்கு தயாராகுங்கள்..‌‌

Read Previous

அருமையான சிறுகதை..!! படித்ததில் மனதையும் கண்களையும் கலங்க வைத்த பதிவு..!!

Read Next

இல்லற வாழ்வில் கணவன்-மனைவி தாம்பத்திய உறவை வர்ணிக்கும் அருமையான கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular