ப்ரூட் கஸ்டட் செய்வது எப்படி..?? ரொம்ப ஈசி தான்..!! நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க..!!

Oplus_131072

ப்ரூட் கஸ்டட் செய்வது எப்படி……

பெரியவர்களில் இருந்து பெரியவர்கள் வரைக்கும் இது ரொம்ப பிடிக்கும்.

தேவையான பொருட்கள்

1/2 லிட்டர் பால்
1/2 கப் மாதுளை பழம்
1 ஆப்பிள்
1 வாழை பழம்
1/2 கப் பச்சை திராட்சை
1/2 கப் கருப்பு திராட்சை
2 மேஜைக்கரண்டி பேரிச்சம் பழம்
1/2 கப் மாம்பழம்
2 மேஜைக்கரண்டி கஸ்டட் பவுடர்
சர்க்கரை தேவையான அளவு
1 மேஜைக்கரண்டி துருவிய பாதாம்
1 மேஜைக்கரண்டி துருவிய பிஸ்தா

Instructions
முதலில் மாதுளை, ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, பேரிச்சம் பழம், மற்றும் மாம்பழத்தை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் கலக்காத கெட்டியான பாலை ஊற்றி சுட வைக்கவும்.
பால் சுடுவதற்குல் ஒரு கிண்ணத்தில் 2 மேஜைக்கரண்டி அளவு அவர் அவருக்கு பிடித்தமான ஃப்ளேவர் கஸ்டர்ட் பவுடரை போட்டு 4 லிருந்து 5 மேஜைக்கரண்டி அளவு பாலை சேர்த்து கட்டி தட்டாமல் நன்கு கலக்கிக் கொள்ளவும்.

பால் சிறிது சுட்டதும் அதில் கலந்து வைத்திருக்கும் இந்த கஸ்டர்டு பவுடரை கலவையை அதில் சேர்த்து நன்கு கலக்கி விடவும். (சரியாக கலக்கவில்லை என்றால் கஸ்டட் பவுடர் அடியில் சென்று தங்கி விடும்.)
பின்பு பால் சிறிது நிறம் மாறியதும் அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப சர்க்கரையை சேர்த்து சர்க்கரை கரையும் வரை கலக்கிக் கொண்டே இருக்கவும்.
சர்க்கரை நன்கு கரைந்த பின் அடுப்பிலிருந்து பாலை இறக்கி நன்கு ஆற விடவும்.
பால் நன்கு ஆறியவுடன் அதில் தயார் செய்து வைத்திருக்கும் மாதுளை, ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, பேரிச்சம் பழம், மற்றும் மாம்பழத்தை ஒவ்வொன்றாகப் போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.

பின்னர் இந்த கலக்கிய ஃப்ரூட் கஸ்டர்டை அப்படியே எடுத்து ஃபிரிட்ஜில் 1 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை வைக்கவும்.
இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு எடுத்து ஒரு கிண்ணத்தில் இதை ஊத்தி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய பாதாம் மற்றும் பிஸ்தாவை அதன் மேலே தூவி பரிமாறவும்.
இப்பொழுது உங்கள் சுவையான, சத்தான மற்றும் சில்லென்ற ப்ரூட் கஸ்டட்தயார்.
இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Read Previous

ரவை பொங்கல் எப்படி செய்ய வேண்டும் தெரியுமா..??

Read Next

கல்யாண வீட்டு ரவை கேசரி..!! சுவை மாறாமல் அதே சுவையில் செய்வது எப்படி..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular