Oplus_131072
நாவல் பழ விதைகளின் நன்மைகள் பற்றி நம்மில் பலருக்கும் தெரியாது. நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் இந்த நாவல் பழம் என்பது அனைவருக்கும் தெரிந்த பழமாக இருந்தது அனைவரும் இதை விரும்பியும் சாப்பிட்டார்கள். ஆனால் இந்த நவீன காலகட்டத்தில் ஒரு சிலருக்கு நாவல் பழம் என்றால் என்ன என்று கூட தெரியவில்லை. இந்நிலையில் இந்த நாவல் பழ விதையில் இருக்கக்கூடிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
நாவல் பழ விதை பொடியை சிறிதளவு எடுத்து, அதை வெந்நீரில் கலந்து குடித்தால் சுகர் லெவலை கட்டுப்படுத்தலாம் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இதில் குடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்களை தூண்டும் ஆற்றல் உள்ளது. கல்லீரல், சிறுநீரகத்தில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் சரும பளபளப்பிற்கு உதவும். ரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு, கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்கிறது…..




