சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், உயிருக்கு ஆபத்து உண்டாகும் நிலை ஏற்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த அளவிற்கு சிறுநீரகம் முக்கியமான ஒன்றாகும். எனவே, காலிபிளவர் சாப்பிடுவதால் அதிலுள்ள வைட்டமின் சி மற்றும் ஃபோலிட் சிறுநீரக செயல் திறனை மேம்படுத்துகிறது. அதேபோல் ஆப்பிள், பூண்டு சாப்பிடுவது நல்லது. குடைமிளகாய் அதிலும் சிவப்பு குடை மிளகாயில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, போலிக் அமிலம் பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளது. இதில் சிறுநீரகங்களின் வீக்கத்தை குறைக்க உதவும்.




