பேருந்தில் பயணிக்கும் போது பொதுவாக மக்கள் செய்யும் தவறுகள் என்னென்ன?
ஜன்னலோர சீட்டைப் பிடித்து உட்கார்ந்து, பேருந்து போய்க்கொண்டிருக்கும்போது எதையாவது துப்புவது.
நீண்டதூர பயணங்களில் பெரியவர்களும், சிறியவர்களும் நொறுக்குத்தீனி சாப்பிடுவது இயல்பு, ஆனால் அதன் பின் வாந்தி எடுப்பார்கள் என்று தெரிந்தால் அதற்கான சரியான ஏற்பாடுகளை செய்யாமல் பக்கத்தில் இருப்பவர் மீது எடுத்து விடுவது.
மூன்று பேர் அமரக்கூடிய சீட்டில் குழந்தைகள் உட்கார்ந்திருந்தால் இன்னொருவர் உட்கார முடியும், நீண்ட தூர பயணத்தில் வயதில் பெரியவர்கள், நீண்ட நீரம் நிற்க முடியாதவர்கள் நிற்பதைப் பார்த்ததும் அந்த சீட்டில் இடம் தெரியாதவாறு மறைத்துக் கொள்ளுதல்.
நிலக்கடலை போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு குப்பைகளை பேருந்திலேயே போட்டு விடுவது.
பேருந்தின் உள்ளே இடம் இருந்தாலும் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு மற்றவர்களை ஏறவிடாமல் செய்வது.
முன் சீட்டில் பெண் இருந்தால்…சிறிய இடைவெளி கிடைத்தாலும் அவர்களை சீண்டும் ஒருசில ஆண்கள்.
இறங்கவேண்டிய நிறுத்தத்தை தவறவிட்டு நடத்துனரிடம் சண்டை போடுவது.
வேண்டுமென்றே சிலபேர் மற்றவர்களின்மேல் உரசுவது.




